×

சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணை: சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் சினிமாவில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி, சம்திங் சம்திங், கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் ரவி மோகன் மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இருவரும் 3 முறை சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில், இந்த விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர். சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் அழைத்திருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின்னர் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

The post சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணை: சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayam Ravi ,Aarthi ,Chennai Family Court ,Chennai ,Ravi Mohan Mohan ,Jayam ,M Kumaran ,
× RELATED ரவி மோகனின் கராத்தே பாபுவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகல்