×

மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை, தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து தமிழக சட்டசபையில் பட்ஜெட் அறிவிப்பின்படி, திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில், மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது. அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. தற்போது, அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளதால், டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Environmental Impact Assessment Commission ,Madurai, Trichy ,Chennai ,Tamil Nadu ,Tidal Park Corporation ,Taramani ,Pattabiram ,Coimbatore ,Tamil Nadu Assembly ,Tidal ,Trichy ,Madurai… ,
× RELATED மதுரை, திருச்சி டைடல் பூங்கா...