×

யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் சூட்டல்: பிரதமர் மோடி வரவேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சென்றபோது யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கிடையேவுள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

The post யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் சூட்டல்: பிரதமர் மோடி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Jaffna Cultural Center ,Thiruvalluvar Cultural Center ,PM Modi ,New Delhi ,Modi ,Jaffna ,Sri Lanka ,President ,Ranil Wickremesinghe… ,
× RELATED இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு...