முல்தான்: பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முல்தான் நகரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் பாக் 4 விக்கெட் இழந்து 143ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த சவுத் ஷகீல் 56, முகமது ரிஸ்வான் 51ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 141ரன் சேர்த்தனர். கூடவே ஷகீல் 84, ரிஸ்வான் 71ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 230ரன்னுக்கு முடிந்தது. வெ.இ வீரர்கள் சீல்ஸ், வாரிகன் தலா 3, விக்கெட் கைப்பற்றினர்.
அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறைந்த ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினர். எனினும் வாரிகன் ஆட்டமிழக்காமல் 31, சீல்ஸ் 22 ரன் எடுக்க, கூடவே உதிரிகள் மூலம் 22 ரன் கிடைக்க வெ.இ 100 ரன்னை கடந்தது. எனினும் வெ.இ முதல் இன்னிங்ஸ் 25.2ஓவரில் 137ரன்னுக்கு முடிவுக்கு வந்தது. பாக் வீரர்கள் சஜித் 4, நோமன் 5 விக்கெட்களை அள்ளினர். அதனையடுத்து பாகிஸ்தான் 93ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி 31ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 109ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
The post முல்தான் முதல் டெஸ்ட் முன்னிலைப் பெற்ற பாகிஸ்தான் appeared first on Dinakaran.