- ஈரோட் கிழக்கு
- திமுகா
- நடாகா
- ஈரோடு
- மாநகராட்சி
- சந்திரகுமார்
- Sitalakshmi
- தொகுதி
- கிழக்கு தொகுதி இடைக்கால தேர்தல்
- தின மலர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 58 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 58 பேர் 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 4 வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி அமுதாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 3 வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பதிவுபெற்ற அரசியல் கட்சிகளை சார்ந்த அகில இந்திய எம்ஜிஆர் ஜனநாயக கட்சி சார்பில் சேலம் ஆத்தூர் முல்லைவாடி ராஜமாணிக்கம், இந்திய ஜன சங்கம் சார்பில் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம், சென்னை கொளத்தூரை சேர்ந்த அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ரவி, சுயேச்சை வேட்பாளர்கள் 49 பேர் என 58 பேர் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று 11 மணிக்கு துவங்கி பிற்பல் 3 மணி வரை நடைபெற்றது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த 58 வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேட்புமனுக்கள் பரிசீலனை கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா முன்னிலையில் நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையில் ஒவ்வொரு வேட்பாளரின் பெயர்களும் வரிசையாக படிக்கப்பட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிவித்தனர். வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதையும் விளக்கி கூறினர். இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வேட்புமனு மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வேட்புமனுக்கள் வாபஸ் பெற வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்து, சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் நடத்தப்பட்டு, அன்றைய தினமே வெற்றிபெற்ற வேட்பாளர் விவரம் வெளியிடப்படும்.
திமுக வேட்பாளருக்கு தபெதிக ஆதரவு
ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சந்திரகுமாருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரவு அளித்து, அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.