×

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற கோரிக்கை

 

துவரங்குறிச்சி, ஜன.18: துவரங்குறிச்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் அதிக அளவில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லுபட்டி சாலை, பொன்னம்பட்டி சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பொது இடங்களில் சாலை ஓரத்தில் கடைகளின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலையோரங்களில் அதிக இடங்களில் பேனர்கள் வைப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லும் போது அல்லது வாகனங்கள் செல்லும் போது பேனர் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் பொன்னம்பட்டி பேரூராட்சியில் முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thuvarankurichi ,Ponnampatti Town Panchayat ,Trichy District ,Billupatti Road ,Ponnampatti Road ,Women's… ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே தனியார் பள்ளியில்...