×

எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா

 

திருச்சி, ஜன. 18: திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்காச்சரகத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மண்டல வன அலுவலர் பெரியசாமி அறிவுறுத்தலின்படியும், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா வழிகாட்டுதல் படியும், உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் யானைகளுக்கு பொங்கல், கரும்பு, சுண்டல் மற்றும் பழ வகைகள் படைக்கப்பட்டு மாட்டுப்பொங்கல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,MR Palayam Elephant Rehabilitation Centre ,Trichy ,Elephant Rehabilitation ,Centre ,MR Palayam ,Trichy Forest Department, Wildlife and Parks Department ,Mattu Pongal ,Zonal Forest Department… ,Palayam Elephant ,Rehabilitation ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை...