- துவாக்குடி போலீஸ்
- பொங்கல் திருவிழா
- Thiruverumpur
- துவாக்குடி காவல் நிலையம்
- திருவெறும்பூர் போலீஸ்
- தமிழர்கள்
- தமிழர்கள்.…
திருவெறும்பூர், ஜன.18: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய போலீசார் பொங்கல் விழாவை குரூப் டிரஸ் அணிந்து திருவெறும்பூர் போலீசாருக்கு போட்டியாக விமரிசையாக கொண்டாடினார்கள். தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 12ம் தேதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில், காவல் நிலையத்திற்கு வெளியே பொங்கல் வைத்து அனைத்து காவலர்களும் ஊதா கலர் சட்டையும், வெள்ளை நிற வேஷ்டியும் அணிந்தும், பெண் காவலர்கள் ஊதா நிறத்தில் புடவை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக பொங்கல் தினமான துவாக்குடி போலீசார் அனைவரும் பச்சை நிற சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்தும், பெண் காவலர்கள் ஆரஞ்சு நிறத்தில் சேலை அணிந்தும், சேலஞ்ச் சிம்பலை காட்டி கொண்டாடிய சம்பவம் சரியான போட்டியாக அமைந்தது, திருவெறும்பூர் வட்ட காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post துவாக்குடி போலீசார் குரூப் டிரஸ் அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.