×

எட்டின்ஸ் சாலையில் மாத கணக்கில் நிறுத்தப்பட்ட கார்களை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி,ஜன.18: நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாக ஊட்டி விளங்கி வருகிறது. நகரின் முக்கிய சாலைகளாக கமர்சியல் சாலை,எட்டினஸ் சாலை,கூடலூர் சாலை உள்ளிட்டவைகள் உள்ளன. சுற்றுலா நகரமாக விளங்குவதால் நகரில் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.சேரிங்கிராஸ் முதல் பஸ் நிலையம் வரை சுமார் 3 கிமீ., தூரம் உள்ள எட்டின்ஸ் சாலையில் வணிக நிறுவனங்கள்,ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் இச்சாலை எப்போதும் பிஸியாக இருக்கும்.

மேலும் அரசு பஸ்களும் இச்சாலை வழியாகவே சென்று வருகின்றன. இச்சாலையில் ஏடிசி., முதல் பஸ் நிலையம் வரை உள்ள பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான பழுதடைந்த லாரிகள்,கார்கள் மாத கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் போகிறது. எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இச்சாலைகளில் மாத கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி அப்புறப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post எட்டின்ஸ் சாலையில் மாத கணக்கில் நிறுத்தப்பட்ட கார்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ettins Road ,Ooty ,Nilgiris district ,Commercial Road ,Gudalur Road ,Charing Cross… ,Dinakaran ,
× RELATED தேயிலை பூங்காவில் நாற்று உற்பத்தி தீவிரம்