×

உ.பி. அரசு பள்ளியில் பணியாற்றிய பாகிஸ்தான் பெண் மீது வழக்கு

பரேலி: உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் மாதோபூரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஷூமைலா கான் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஷூமைலா கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு கான் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பதேகஞ்ச் கல்வி அதிகாரியின் புகாரின் பேரில் ஷூமைலா கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post உ.பி. அரசு பள்ளியில் பணியாற்றிய பாகிஸ்தான் பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bareilly ,Shumaila Khan ,Madhopur, Bareilly ,Uttar Pradesh ,Pakistan ,Dinakaran ,
× RELATED தவறாக வழிகாட்டிய மற்றொரு சம்பவம்;...