×

கலக்க காத்திருக்கும் கமலினி

இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழ்நாட்டு பெண் கமலினி குணாளன்(16வயது). மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான கமலினி விக்கெட் கீப்பராகவும் பங்களிக்கிறார். தென் ஆப்ரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடர், யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் பலரையும் ஈர்த்தது.

கூடவே இந்த ஆண்டுக்கான பெண்கள் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இவரை கடும் போட்டிக்கு இடையில் 1.60கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கமலினிக்கு ஊக்கமளிக்கும் தந்தை குணாளன், தனது கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆதரவு அளிக்கும் தாய் சரண்யா இல்லத்தரசியாக இருக்கிறார்.

The post கலக்க காத்திருக்கும் கமலினி appeared first on Dinakaran.

Tags : Kamalini ,Kamalini Gunalan ,Tamil Nadu ,Tiruprangunath ,Madurai ,South Africa ,U19 Asian Cup ,Dinakaran ,
× RELATED மும்பை ஐபிஎல் அணியில் தமிழ்நாட்டுப் பெண்!