கோலாலம்பூர்: ஐசிசி யு19 பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று மலேசியாவில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய பெண்கள் அணி உட்பட 16 அணிகள் களம் காண உள்ளன. இந்த அணிகள் 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ரவுண்டு ராபின் முறையில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். அதில் இடம் பெற்றும் 12 அணிகளும் தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்டு ராபின் முறையில் விளையாடும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரையிறுதியில் களம் காணும். அரையிறுதி ஆட்டங்கள் ஜன.31ம் தேதியும், இறுதி ஆட்டம் பிப்.2ம் தேதியும் நடைபெறும். இந்த ஆட்டங்கள் மலேசியாவின் பாங்கி, ஜோகூர் பார், சரவாக், கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் நடக்கின்றன.முதல் நாளான இன்று முதல் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியை எதிர்கொள்கிறது.
* முதல் சாம்பியன் இந்தியா
பெண்களுக்கான ஐசிசி யு19 டி20 உலக கோப்பை முதல் முறையாக 2023ம் ஆண்டு தெடங்கியது. தென் ஆப்ரிக்காவில் நடந்த அந்த முதல் போட்டியிலும் 16 அணிகள் பங்கேற்றன. இந்தியா தான் இடம் பெற்ற டி பிரிவிலும், சூப்பர் 6 பிரிலும் முறையே முதல் இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும், இறுதியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி போட்டியின் முதல் சாம்பியனானது.
The post இன்று மலேசியாவில் தொடங்குகிறது யு19 பெண்கள் உலக கோப்பை டி20 appeared first on Dinakaran.