- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
- ஜோகோவிக்
- அல்கராஸ்
- சபலெங்கா
- பென்சிக்
- மெல்போர்ன்
- ஆஸ்திரேலிய ஓபன்
- கார்லோஸ் அல்கராஸ்
- ஸ்பெயின்
- நுனோ போர்ஹெஸ்
- தின மலர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபனில் நேற்று 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் நெம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்(21வயது, 3வது ரேங்க்), போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ்(27வயது. 33வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அல்கராஸ் 2மணி 55 நிமிடங்கள் போராடி 6-2, 6-4, 6-7(3-7), 6-2 என்ற செட்களில் வெற்றிப் பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்(37வயது, 7வது ரேங்க்), செக் குடியரசு வீரர் தோமஸ் மெக்காக்(24வயது, 25வது ரேங்க்) ஆகியோர் களமிறங்கினர். அதில் அனுபவ ஆட்டக்காரர் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 4வது சுற்றில் விளையாட உள்ளார். இந்த ஆட்டம் 2மணி 22நிமிடங்கள் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் பெலராசின் அரினா சபலென்கா(26வயது, 1வது ரேங்க்) 2மணி 6நிமிடங்கள் விளையாடி 7-6(7-5), 6-4 என நேர் செட்களில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டெவ்சனை(22வயது, 41வது ரேங்க்) வீழ்த்தினார்.
அதே நேரத்தில் முன்னாள் ஆஸி ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா(27வயது, 51வது ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்(27வயது,421வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை 58நிமிடங்கள் நீண்ட முதல் செட்டை பென்சிக் 7-6(7-3) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். ஆரம்பம் முதலே காயம் காரணமாக தடுமாறி ஒசாகா 2வது செட் வி ளையாடாமல் போட்டியில் இருந்தே வெளியேறினார். அதனால் 3வது சுற்றில் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் பென்சிக் 4வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
* போபண்ணா வெற்றி
ஆடவர் இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியனான இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை முதல் சுற்றிலேயே தோற்று வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சீன வீராங்கனை சுயாய் ஜாங் உடன் களமிறங்கினார். அவர்களை எதிர்த்து விளையாடிய கிறிஸ்டினா மெலடெனோவிச்(பிரான்ஸ்)/இவான் டோடிக்(குரோஷியா) இணையை 6-4, 6-4 என நேர் செட்களில் வென்றது. ஒரு மணி 12 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் மூலம் போபண்ணா இணை 2வது சுற்றுக்கு முன்னேறியது.
The post ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ்: சபலென்கா, பென்சிக் முன்னேற்றம் appeared first on Dinakaran.