×

சிகரெட்டால் சூடு வைத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் அதிமுக பிரமுகர் மகன் கைது: வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

நெல்லை: நெல்லையில் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகரின் மகனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். நெல்லை, தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் நிர்வாக வேலைகளை அவரது மகன் முகம்மது சர்ஜின் (30) என்பவரும் கவனித்து வருவதால் அவர் அடிக்கடி 3 இடங்களில் உள்ள கம்பெனிகளுக்கும் சென்று வருவார்.

நெல்லை டவுன், பாறையடியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலை செய்யும் திருமணமான 35 வயது பெண்ணை அவர் தவறான எண்ணத்தில் அணுகி உள்ளார். இதுகுறித்து அந்த பெண், கம்பெனியின் முதலாளி முகமது மீரானிடம் கூறியதாகவும், அதனால் அவர், முகமது சர்ஜினை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த முகமது சர்ஜின் அந்த பெண்ணை டவுன், பாறையடியில் உள்ள கம்பெனிக்கு வரவழைத்து தாக்கி, காயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த பெண் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று போலீசாரின் விசாரணையில் முகமது சர்ஜின் தன்னை சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் பிஎன்எஸ் 68ன் கீழும் (அரசு அல்லது தனியார் அமைப்புகளில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்), தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து அதிமுக பிரமுகரின் மகனான முகமது சர்ஜினை நேற்று முன்தினம் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post சிகரெட்டால் சூடு வைத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் அதிமுக பிரமுகர் மகன் கைது: வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nellai ,Nellai Town All-Women Police ,Mohammed Meeran ,Thazhayuthu ,AIADMK… ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா பறித்த மந்திரி பதவியை...