×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு கிழக்கில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2021, 2023 தேர்தல்களில் அத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில், ஜன.10-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதியன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள், 13-ம் தேதி 6 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று (17-ம் தேதி) இறுதி நாளாகும். இன்று காலை தி.மு.க. வேட்பாளர் , நா.த.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜன.20ல் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். 17 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவுபெற்றது. 5-ந்தேதி வாக்குப்பதிவும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

 

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 பேர் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Erode East ,Erode ,DMK ,V.C. Chandrakumar ,NDA ,Seethalakshmi ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது