×

கூடலூர் அரசு பள்ளியில் திருவள்ளுவர் தின விழா

கூடலூர்,ஜன.17: கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993-1995-ல் படித்த முன்னாள் மாணவர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் மாணவர் வழக்குரைஞர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டேவிட்சன் வரவேற்று பேசினார்.

தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி வாழ்த்தி பேசினார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள், முன்னாள் நகர் மன்ற தலைவர் பாண்டியராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா சேகர்,ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஷாஜி எம் ஜார்ஜ், பாபு, தாமஸ், தங்கஅருணா,சந்தோஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சந்திரகுமார் நன்றியுரை கூறினார்.

The post கூடலூர் அரசு பள்ளியில் திருவள்ளுவர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar Day ,Koodalur ,Government School ,Government Model Secondary School ,Davidson ,Ananda Kumar ,Yogeshwari ,Thiruvallawar Day ,Koodalur Government School ,Dinakaran ,
× RELATED பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்ய கோரிக்கை