×

வரையாடுகள் தின விழிப்புணர்வு போட்டி

ஊட்டி, ஜன.17: வரையாடுகள் விழிப்புணரவு குறித்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மஞ்சூர் அரசு பள்ளி மாணவர்கள் முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில விலங்காக கருதப்படும் நீலகிரி வரையாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு நலன் கருதி “நீலகிரி வரையாடு தினம்” விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா உத்தரவு படி கடந்த அக்டோபர் மாதம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு பாதுகாப்பின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படது.

வரையாடு தின உறுதிமொழி, பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி வரையாடு உருவ மாதிரி மனித சங்கிலி, ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி,வினாடி வினா போட்டி ஆகிய திறனாய்வு போட்டிகள் முக்கூருத்தி வனச்சரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளி தேர்வுகள் முடிந்த நிலையில், வரையாடு தின விழிப்புணர்வு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி ஜங்கில் சபாரிக்காக தெப்பகாடு சான்ட் ரோடு சுற்றுபாதையில் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். வனச்சரகர் யுவராஜ் தலைமையிலான வனத்துறையினர் உடன் சென்றனர்.
அப்போது பல்வேறு வன விலங்குகளை நேரில் பார்த்து மாணவர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது வனவிலங்குகளின் வாழ்க்கை சூழல்,இயற்கையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதன் பின்னர் தெப்பக்காடு யானை முகாம் பொங்கல் திருவிழாவில் பங்கேற்றனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

The post வரையாடுகள் தின விழிப்புணர்வு போட்டி appeared first on Dinakaran.

Tags : Elephant Day Awareness Competition ,Ooty ,Manjoor Government School ,Elephant Awareness Competition ,Mudumalai Tiger Reserve ,Nilgiri Elephant ,Tamil Nadu ,
× RELATED மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்