×

விவசாயக் கல்லுரி மாணவி மரணத்தில் சந்தேகம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி, சிவகங்கை மாவட்டம் விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி மூன்றாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 7ம்தேதி அன்று கல்லூரி விடுதி வார்டன் கோகிலா என்பவர், பிரித்திதேவியின் தந்தை செல்வகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரித்தி தேவி கல்லூரி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும், ஆயா சந்திரா என்பவரும், மாணவி தாட்சாயினி என்பவரும் பார்த்து தகவல் தெரிவித்தனர் என்றும், பின்பு அவரை காரைக்குடி குளோபல் மருத்துவனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும், அங்கு வந்து விடுமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொன்ன தகவலின் படி பார்த்தால், மாணவி பிரித்தி தேவியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனதமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

The post விவசாயக் கல்லுரி மாணவி மரணத்தில் சந்தேகம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Marxist ,CBCID ,Chennai ,Marxist Party ,Secretary of State ,Sanmugham ,Pritdidevi ,Selvakumar ,1st Street ,Tirunelveli District ,Palaiangkottai Taluga ,Veeramanikapuram 1st Street ,BSc Akka ,Setu Bhaskara Agricultural College ,Visalankottai, Sivaganga District ,CPCID ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம் ஒத்திவைப்பு