×

பொங்கல் முடிந்து சென்னை திரும்பியவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய பொதுமக்களால், பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு ஜன.14ம் தேதி முதல் ஜன.17ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். பண்டிகையை கொண்டாடிய பிறகு மீண்டும் சென்னை நோக்கி நேற்று முதல் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனம் மூலம் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதனால் அதிகபடியான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னைக்கு வந்ததால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post பொங்கல் முடிந்து சென்னை திரும்பியவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Paranur toll plaza ,Chennai ,Pongal ,Pongal festival ,
× RELATED பொங்கல் முடிந்து திரும்புபவர்களால்...