- இங்கிலாந்து
- லண்டன்
- ஓல்ட்ஹாம் ராயல் மருத்துவமனை
- கிரேட்டர் மான்செஸ்டர், வடமேற்கு இங்கிலாந்து
- அச்சம்மா செரியன்
- தின மலர்
லண்டன்: வடமேற்கு இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் ஓல்ட்ஹாம் ராயல் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் இந்தியாவை சேர்ந்த அச்சம்மா செரியன்(50) என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால், அச்சம்மா செரியனின் கழுத்தில் பலமாக குத்தி உள்ளார். இதில் ரத்த வௌ்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த அச்சம்மா செரியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செவிலியரை கத்தரிக்கோலால் குத்திய நோயாளி ரூமன் ஹக்(37) கைது செய்யப்பட்டார்.
The post இங்கிலாந்து மருத்துவமனையில் இந்திய நர்சுக்கு கத்திக்குத்து: நோயாளி கைது appeared first on Dinakaran.