×

ஒரே ராக்கெட்டில் நிலவுக்கு 2 லேண்டர்கள் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

கேப் கனவெரல்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜப்பான், அமெரிக்காவின் 2 தனியார் நிறுவனங்களை சேர்ந்த லூனார் லேண்டர்கள் நிலவுக்கு நேற்று வெற்றிகரமாக அனுப்பப்பட்டன. ஜப்பானின் ஐஸ்பேஸ் மற்றும் அமெரிக்காவின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. ஐஸ்பேஸ் நிறுவனத்தின் லேண்டர் நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரங்களை சோதிக்க அனுப்பப்பட்டுள்ளன. பயர்பிளை ஏரோஸ்பேஸ் லேண்டர், நிலவின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் பயர்பிளே நிறுவன லேண்டர் வரும் மார்ச் மாதத்திலும், ஐஸ்பேஸ் லேண்டர் மே மாதத்திலும் நிலவில் தரையிறங்கும்.

The post ஒரே ராக்கெட்டில் நிலவுக்கு 2 லேண்டர்கள் அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Space X. ,Moon ,Cape Canaveral ,NASA ,Kennedy Space Exploration ,Center ,Florida ,United States ,Space X ,Japan ,
× RELATED நடுவானில் வெடித்துச்சிதறிய எலான்...