×

அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

 

பெ.நா.பாளையம். ஜன.14: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திறக்கு உட்பட்ட அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசோகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில் அதிமுக, பாஜ உட்பட சில கட்சி நிர்வாகிகள், ஊராட்சியின் முன்னாள் தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுத்தனர். இதில் ஊராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். நகராட்சியுடன் இணைத்தால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு முதலமைச்சர், தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், முதன்மை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ashokapuram Panchayat ,P.N. Palayam ,Periyanayakkanpalayam ,Coimbatore ,Natarajan ,AIADMK ,BJP ,panchayat ,Dinakaran ,
× RELATED கோவை துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி உயிரிழப்பு