×

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

காஞ்சிபுரம், ஜன.14: காஞ்சிபுரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளதால் கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை நடந்தது. இதையோட்டி, பிரசித்தி பெற்ற  ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வழக்கறுத்தீஸ்வரர் கோயில், சிவகாமி சமேத நடராஜர் கோயில், புண்ணியகோட்டீஸ்வரர் கோயில், காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர் என 127 சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, சிவன் கோயிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆனந்த நடனம் ஆடும் நடராஜர் கேட்டவரம் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், நடராஜ பெருமானை தரிசித்தால் எல்லா பிணிகளும் விலகும் என்றும் எதிர்ப்புகள் இருந்தாலும் எதிர்ப்புகள் தனியும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில், அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று நடராஜரை தரிசித்தனர்.

The post சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Aruthra Darshanam ,Shiva temples ,Kanchipuram ,Ekambaranathar ,Temple ,Kachhabeswarar Temple ,Vaksharutheeswarar Temple ,Sivagami Sametha… ,
× RELATED 3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு!