×

பக்கிங்காம் கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு

துரைப்பாக்கம், ஜன.14: சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் கலைஞர் கருணாநிதி சாலைன் குறுக்கே அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயில், ஆண் சடலம் மிதப்பதாக கானத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், சிறுசேரி தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து, கால்வாயில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

The post பக்கிங்காம் கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Duraipakkam ,Kanathur police ,Kalaignar ,Karunanidhi Salai ,Sholinganallur ,East Coast Road ,Siruseri ,Dinakaran ,
× RELATED முட்டுக்காடு படகு மிதவை உணவகத்தில் ஒருவர் பயணிக்க ரூ.1400 கட்டணம் நிர்ணயம்