×

அரசு நிதியுதவியுடன் மறுவாழ்வு இல்லம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஜன.14: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில் யாசகம் கேட்டல் தடுத்தல் சட்டம், 1945ன் கீழ், யாசகம் பெறுவோருக்கு அரசு நிதி யுதவியுடன் மறுவாழ்வு இல்லம் அமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருவுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பத்துடன் கருத்துருவினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13, சாமி பிள்ளை தெரு, சூளை, சென்னை-600 112 என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கலாம், என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

The post அரசு நிதியுதவியுடன் மறுவாழ்வு இல்லம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Child Welfare and Special Services Department ,Dinakaran ,
× RELATED அனைத்து துறைகளிலும் பெண்களின்...