மும்பை: வரும் பிப்.19ம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடர் துவங்க உள்ளது. மார்ச் 9ம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளில் இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இத் தொடரில் மோதும் நாடுகள் தங்கள் அணிகளில் ஆடும் வீரர்கள் பட்டியலை ஜன.12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூறியிருந்தது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோதும் வீரர்கள் அடங்கிய பட்டியலை தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளன. இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், ‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல், வரும் 17 அல்லது 18ம் தேதி வெளியிடப்படும். அந்த தேதிகளில் தேர்வு குழு கூடி அணியை தேர்வு செய்து பட்டியலை வெளியிடும்’ என்றார்.
The post சாம்பியன்ஸ் கோப்பைக்கு ஆடும் வீரர்கள் பட்டியல் எப்போது? பிசிசிஐ துணை தலைவர் தகவல் appeared first on Dinakaran.