×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, ஜன.14: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தை பொங்கல் திருநாளை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த 4 நாட்களாக சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்துகள் சரிவர இயக்கப்படுகின்றதா என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது திருச்சி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, கன்னியாகுமாரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் பயணிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அமைச்சர் திடீரென வந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்ததால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Klampakkam ,Kuduvanchery ,Kalaignar Centenary Bus Stand ,Klampakkam GST Road ,Vandalur ,Dinakaran ,
× RELATED சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து...