செங்கல்பட்டு, ஜன.14: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீ மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடையில் பாலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களப்பிரியா தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் நேற்று காலை சோதனை செய்தனர். அப்போது, கடைக்குள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கடை உரிமையாளரான ஹீரா (32) மற்றும் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் அம்மனம்பாக்கத்தை சேர்ந்த யுவராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா பதுக்கியவர்கள் கைது appeared first on Dinakaran.