×

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பும்ரா ஆடுவது சந்தேகம்? காயம் குணமாகவில்லை என தகவல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடுவது சந்தேகம் என தகவல் வௌியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அபார சாதனை படைத்தார் பும்ரா. சிறப்பான பார்மில் உள்ள அவர் 5வது டெஸ்டின் 2வது இன்னிங்சில், முதுகில் ஏற்பட்ட காயத்தால் பந்து வீச முடியாமல் போனது.

தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பிப்.19ம் தேதி, பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் தொடர் துவங்குகிறது. முகுகில் ஏற்பட்ட காயம் இன்னும் பூரணமாக குணமடையாததால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் பும்ரா ஆடுவது சந்தேகம் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியுடன் நடக்கவுள்ள டி20 போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அந்த பட்டியலிலும் பும்ரா பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

The post சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பும்ரா ஆடுவது சந்தேகம்? காயம் குணமாகவில்லை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,New Delhi ,Jasprit Bumrah ,Pakistan ,Gavaskar ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஸ் கோப்பை போட்டி; பும்ரா...