×

சோழர் காலத்தில் பொங்கல்

பொங்கலைப் பற்றிய வரலாற்று ஆதாரம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கிடைக்கிறது. முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. புதியீடு என்பது முதல் அறுவடை எனப்படும். அதேபோல் கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் ‘மகர சங்கரமணப் பெரும் பொங்கல்’ என்ற குறிப்பு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது. அறுவடை திருநாளான பொங்கல் விழாவினை, ‘நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க…’ என ஐங்குறுநூறு கூறுகிறது. தமிழர்களின் தனித்துவமான விழாவான பொங்கல் பற்றி சீவகசிந்தாமணியில் ‘மங்கையர் வளர்த்த செந்தீப்புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ எனும் வரிகள் மூலம் அறிய முடியும்.

The post சோழர் காலத்தில் பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை...