×

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், தை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள கப்பிவாக்கம் கிராமம், கலைஞர் திடலில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக அக்கிராமத்தில் 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய பந்தல், திருவள்ளுவர் சிலை, ஏர் உழுதல், ஜல்லிக்கட்டு, பொங்கல் பானை ஆகிய அலங்காரங்களுடன் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சாலையோரங்களில் திமுக கொடிகள் பட்டொளி வீசி பறந்தன. இதனால் இசிஆர் சாலை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் இனியரசு, துணை செயலாளர்கள் கோகுலகண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், இளைஞரணி நிர்வாகிகள் மணி, பால்ராஜ், சஞ்சய்காந்தி, அருள்முருகன், ஆண்டோ சிரில்ராஜ், யுவராஜ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் வரவேற்றார். இதில் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கானா பாலாவின் பாடல்கள் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. இவ்விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மலர்கொத்து வழங்கி வரவேற்றார். துணை முதல்வரை கிராமிய கலைக்குழுவினர் பாடல் பாடியும் நடனமாடியும் விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.

மேடையில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்து கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். மேலும், 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, 48 கழக தோழர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணயம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, 200 மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி, விளையாட்டு குழுக்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணம் உள்பட இலவச வீட்டுமனை பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், சிவிஎம்பி.எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நாகன், நாராயணன், திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆர்.டி.அரசு, மாநகர செயலாளர் தமிழ்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், சாலவாக்கம் குமார், கண்ணன், தம்பு, சத்தியசாய், சிவகுமார், ராமச்சந்திரன், பாபு, ஏழுமலை, சிற்றரசு, சரவணன், குமணன், குமார், சேகர், மோகன்தாஸ், எழிலரசன்,

சுந்தரமூர்த்தி, பாரிவள்ளல், பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், உசேன், சசிகுமார், எழிலரசி சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன், மாணவரணி அமைப்பாளர் குணசேகரன், சரளா தனசேகரன், சரண்ராஜ், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவகுமார், ஒன்றிய துணை செயலாளர் ரஞ்சித், மீனவரணி அமைப்பாளர் பாரத், அயலக அணி துணை அமைப்பாளர்கள் சிவலிங்கம், பாரதி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் நன்றி தெரிவித்தார்.

The post திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Equality Pongal Festival ,Dimuka ,Chief Executive Officer ,Udayanidhi Stalin ,Maduranthagam ,Tamil New Year ,Tamil Nadu ,Thai ,Samatuwa Pongal Festival ,Kapivakkam Village ,Kalainagar Thital ,Idhitakashinadu district ,Deputy Chief ,Udayaniti Stalin ,Dinakaran ,
× RELATED சமத்துவ பொங்கல் விழா