×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47-ம் நம்பர் கவுன்ட்டரில் யு.பி.எஸ்-ல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ – விபத்து ஏற்பட்டுள்ளது. லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தேவஸ்தான மின்துறை ஊழியர்கள் மின்விநியோகத்தை நிறுத்தி யு.பி.எஸ் இணைப்பை துண்டித்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Andhra Pradesh ,laddu distribution ,UPS ,laddu ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே...