×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா போக்சோவில் கைது..!!

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா போக்சோவில் கைது செய்யப்பட்டார். மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது. சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது. எம்.எஸ்.ஷாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP state economic unit ,president ,MS Shah ,Chennai ,BJP ,state executive ,Madurai… ,BJP state economic ,unit ,Dinakaran ,
× RELATED அதிபர் டிரம்ப் அறிவித்த புதிய...