டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னணி வீரர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரியில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் வங்கதேச வீரர்களை தேர்வு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.
வங்கதேச அணியில் முன்னணி வீரரும் அதிரடி துவக்க வீரருமான தமீம் இக்பால் (35) இடம் பெறுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இது, அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வங்கதேச அதிரடி வீரர் தமீம் இக்பால் ஓய்வு appeared first on Dinakaran.