×

சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது: அமித்ஷா பேச்சு

ஷீரடி: மகாராஷ்டிராவின் ஷீரடியில் நேற்று நடந்த மாநில பாஜ மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மூத்த அரசியல்வாதி சரத்பவார் 1978ம் ஆண்டில் துரோக அரசியலை தொடங்கினார். அப்போது வசந்த் தாதா பாட்டீல் அரசாங்கத்தில் இருந்து 40 எம்எல்ஏக்களுடன் வெளியேறி சரத்பவார் முதல்வரானார். அவர் செய்த துரோகத்தால் 2024ல் மக்கள் அவரை நிராகரித்துள்ளனர்.

உத்தவ் தாக்கரேவின் துரோகத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளனர். இருவரையும் வீட்டுக்கு அனுப்பி, பாஜவுடன் இருக்கும் உண்மையான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசை வெற்றி பெறச் செய்தனர். பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற வெற்றி வரை பாஜவின் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம். பல மாநிலங்களில் ‘இந்தியா கூட்டணி’ சரியத் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

 

The post சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது: அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,Amit Shah ,Shirdi ,Union Minister ,BJP ,Shirdi, Maharashtra ,Vasant Dada Patil ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா...