×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சனிபிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 

திருவாரூர், ஜன. 12: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற சனிபிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில்வரும் வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பிரதோஷம் என்பது மற்ற தினங்களைவிட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சனி பிரதோஷத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், மற்றும் மஞ்சள் தூள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ங்கள் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர்.

 

 

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சனிபிரதோஷ வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Shani ,Thiruvarur Thyagaraja Swamy Temple ,Thiruvarur ,Lord ,Nandi ,Shani Pradosha ,Amavasya ,Pournami days ,Pradosha ,
× RELATED திருநள்ளாறு சனிபகவான் கோயில் போலி...