நாமக்கல், டிச.12: நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15 மற்றும் 26 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும். விதிகளை மீறி மதுக்கடைகளைத் திறந்தாலோ, மறைமுகமாக மது வகைகளை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The post மதுக்கடைகளுக்கு 2 நாள் விடுமுறை appeared first on Dinakaran.