சேந்தமங்கலம், ஜன.12: சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் நைனப்பன் (60), கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சூர்யா (27), குணசீலன் (28), கோவிந்தராஜ் (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து, நைனப்பனுடன் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தனியார் விடுதியில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து வீடு திரும்பும் போது சூர்யா, குணசீலன், கோவிந்தராஜ் சேர்ந்து அங்குள்ள வயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை திருடி வந்தனர். இதுகுறித்து நைனப்பன் விடுதி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து, பொட்டணம் வீட்டில் இருந்த நைனப்பனை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post முதியவரை தாக்கிய 3 ேபர் கைது appeared first on Dinakaran.