×

அமைந்தகரை நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ.,யின் டேப் திருட்டு

 

அண்ணாநகர், ஜன.12: அமைந்தகரை காவல்நிலைய துண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் குணசேகரன், அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நுண்ணறிவு பிரிவு தகவல் சேகரிப்புக்காக தங்களுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்பில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சேகரித்து வைத்துள்ளோம். நேற்று முன்தினம் தகவல் சேரித்துவிட்டு காவல் நிலையம் வந்து பார்த்தபோது டேப்பை காணவில்லை.

தகவல் சேகரிக்க சென்றபோது யாராவது டேப்பை திருடி உள்ளார்களா, பைக்கில் செல்லும்போது டேப் தவறி விழுந்ததா, என தெரியவில்லை. முக்கிய ஆவணங்கள் சேகரித்துள்ளதால் டேப் மறுபடியும் கிடைத்தால்தான் தகவல் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

The post அமைந்தகரை நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ.,யின் டேப் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Aminkarai Intelligence Unit SI ,Annanagar ,Aminkarai Police Station Intelligence Unit ,Assistant Inspector ,Gunasekaran ,Aminkarai Crime Branch Police Station ,Intelligence Unit ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை கிடங்கில் தீ விபத்து