×

செங்கல்பட்டு அருகே கோயிலில் பிறந்து 3 தினமே ஆன பெண் குழந்தை மீட்பு

 

செங்கல்பட்டு, ஜன.12: செங்கல்பட்டு பழவேலி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை தினமும் இரவு 8 மணிக்கு பூட்டி விட்டு அதிகாலை 5 மணிக்கு திறப்பது வழக்கம். அதன்படி, வழக்கம் போல நேற்று அதிகாலை 5 மணிக்கு சிவன் பூசாரி அருண் கோயிலை திறந்து கோயில் பணிகளை துவங்கியபோது ஏதோ குழந்தை அலறல் சத்தம் கேட்டுள்ளது.அதிர்ச்சியடைந்த பூசாரி அருண் உடனே செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் குழந்தையை மீட்ட தாலுகா போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமான 3 நாட்களே ஆன அந்த பெண் குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடன் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையை கோயிலில் வீசிசென்ற மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே கோயிலில் பிறந்து 3 தினமே ஆன பெண் குழந்தை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Shiva ,temple ,Chengalpattu Pazhaveli Trichy-Chennai National Highway ,
× RELATED நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில்...