×

எலக்ட்ரிக்கல்ஸ் டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன் செயற்குழு கூட்டம்

 

காஞ்சிபுரம், ஜன. 12: காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு எலக்ட்ரிக்கல்ஸ் டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாநில தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். செயலாளர் மாசிலாமணி, பொருளாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்ள அரசு பராமரிப்பு பணிகளை பகிர்ந்து அளிக்க வேண்டும், எலக்ட்ரிக்கல்ஸ் துறைக்கு தனிநல வாரியம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயல் தலைவர் வெற்றிவேல், மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post எலக்ட்ரிக்கல்ஸ் டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன் செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Electrical Technicians Association Executive Committee Meeting ,Kanchipuram ,Tamil Nadu Electrical Technicians Association ,State President ,Benjamin ,Masilamani ,Treasurer ,Rajasekhar ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் பல்லவர்மேடு முதல்...