×

சட்டவிரோதமாக மங்களூருவில் தங்கிய வங்கதேச வாலிபர் கைது

மங்களூரு: சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த அனுருல் ஷேக் (25) என்பவர் மங்களூரு அருகே முக்கா கிராமத்தில் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தை சேர்ந்தவர் அனுருல் ஷேக் (25). இவர் சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லால்கோல் எல்லை பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார்.

மங்களூருக்கு வந்து கட்டிடத் தொழிலாளியாக குடியேறினார். இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில் உள் பாதுகாப்பு பிரிவு (ஐ.எஸ்.டி.) மற்றும் மங்களூரு போலீசார் இணைந்து மங்களூரு அருகே முக்கா கிராமத்தில் இருந்த அனுருல் ஷேக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சட்டவிரோதமாக மங்களூருவில் தங்கிய வங்கதேச வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Mangaluru ,Anurul Sheikh ,Mukka village ,Lalgol border ,Dinakaran ,
× RELATED ஆசைவார்த்தை கூறி ரூ.10.32 லட்சம் மோசடி கேரள வாலிபர் சிக்கினார்