×

தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில்

வேலூர், ஜன.11: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியை சேர்ந்தவர் தங்கராஜ்(50). கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள்(42). இருவருக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் ஏதும் இல்லை. தங்களுக்கு குழந்தை ஏதும் இல்லாததால் விரக்தி மனநிலையில் இருந்து உள்ளனர். இதுபற்றி அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் அவ்வபோது வேதனையுடன் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து நேற்று அதிகாலை தகவலறிந்த காட்பாடி போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Thangaraj ,Old Katpadi, Vellore district ,Rajammal ,
× RELATED அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்..!!