திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பின் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அவரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகர விளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தற்போதைய சூழலில் பக்தர்களின் கூட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதனால் சிறிய நடைப்பந்தல், பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிவரும் குழந்தைகள் மட்டுமின்றி முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதால் அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை போக்க தேவஸ்தானம் போர்டு வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சபரிமலையில் அலைமோதும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.