×

கலங்கரை விளக்கம்- நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்: அமைச்சர் எ. வ.வேலு பேரவையில் தகவல்

சென்னை: கலங்கரை விளக்கம்- நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 15 கி.மீ.க்கு கடல் மேல் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. ஒன்றிய , மாநில நிதியில் அமைக்க முடியுமா? அல்லது தனியார் நிதியில் செய்வதா என திட்டமிடப்பட்டு வருகிறது. மும்பை அடல், சேது பாலம்போல் சென்னையிலும் பாலம் அமைக்க கு.பிச்சாண்டி கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் எ. வ.வேலு பதில் தெரிவித்தார்.

The post கலங்கரை விளக்கம்- நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்: அமைச்சர் எ. வ.வேலு பேரவையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lighthouse ,Neelankarai ,Minister ,E. V. Velu ,Chennai ,Union ,Minister E. V. Velu ,Dinakaran ,
× RELATED 150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை...