சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாருக்கு எதிரான அவதூறுகள், சாதி ஒழிப்புக் கருத்தியல் மீதான வெறுப்பு அரசியலின் ஃபாசிசத் தாக்குதல். சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என்று திருமாவளவன் சூளுரை தெரிவித்தார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. பெரியாரின் சாதி ஒழிப்பு கருத்தியல், சமூகநீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங்கப் பரிவாரங்கள் இத்தகைய பரப்புரைகளைச் செய்து வருகின்றன என தெரிவித்தார்.
The post பெரியார் குறித்து அவதூறு: சீமானுக்கு திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.