நெல்லை, ஜன.10: களக்காடு, கக்கன் நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி (36). இவரது மகனும், அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான நித்யா (19) என்பவரது சகோதரியும் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். இதை பார்த்த பாப்பாத்தி சப்தம் போட்டார். இதில் நித்யா , அவரது திருநங்கை தோழியான உடன்குடி, சமத்துவபுரத்தை சேர்ந்த கன்னிகா (26) மற்றும் சிலர் சேர்ந்து பாப்பாத்தியை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு எஸ்ஐ லியோ ரெனிஸ், நித்யா , கன்னிகா ஆகிய இருவரையும் கைது செய்தார்.
The post மிரட்டல் விடுத்த திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.