×

மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்; டிரைவருக்கு வலை

தர்மபுரி, ஜன.10: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் காரிமங்கலம், மல்லிகுட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் லாரியில் இருந்த மண்ணை சாலையில் கொட்டி விட்டு, வேகமாக ஓட்டிச்சென்றார். அந்த லாரியை அதிகாரிகள் துரத்தி சென்று மடக்கிய போது, டிரைவர் தப்பியோடி விட்டார். லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்த போது, அதில் மண் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, லாரியை காரிமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரான காரிமங்கலம் நிம்மாங்கரை பகுதியை சேர்ந்த வேல்முனியப்பன் (44) என்பவரை தேடி வருகின்றனர்.

The post மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்; டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Karimangalam ,Tahsildar Govindaraj ,Mallikuttai ,Lorry ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்