திருமுல்லைவாயல் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரி எனக்கூறி வியாபாரிகளிடம் மாமூல்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரி எனக்கூறி வியாபாரிகளிடம் மர்ம ஆசாமி மாமூல் வசூலித்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (45). இவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இவரது கடைக்கு வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து வந்த மர்ம நபர், தான் ஜி.எஸ்.டி அதிகாரி எனக் கூறியுள்ளார். அப்போது ஜிஎஸ்டி முறையாக செலுத்துகிறீர்களா எனக் கேட்டு கடையில் இருந்தவரை மிரட்டி உள்ளார். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஓனரைத்தான் கேட்க வேண்டும் என ஊழியர் கூறியுள்ளார்.

உடனே அந்த ஆசாமி, 2000 ரூபாய் கொடுங்கள், பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கடையில் இருந்த ஊழியர் என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த ஊழியர் அங்கிருந்து கிளம்பினார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோன்று திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடமும் போலி ஜி.எஸ்.டி அதிகாரி எனக்கூறி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

The post திருமுல்லைவாயல் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரி எனக்கூறி வியாபாரிகளிடம் மாமூல்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: