விண்வெளியில் எதிர்பார்த்ததைவிட சூழல் அதிகமாக உள்ளதாகவும் தெளிவான சூழல் இல்லை என்பதால் செயற்கைகோள் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 2 செயற்கை கோள்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி C 60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 475 கி.மீ சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 2 செயற்கைகோள்களை இணைக்கும் பணி 7 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள் இணைப்பு பணி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 வது முறையாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
The post 2 செயற்கைகோள்களை ஒன்றிணைக்கும் டாக்கிங் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைத்தது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.